மேலும் செய்திகள்
அடகு கடை உரிமையாளர்கள் நகைகளுடன் தப்பியோட்டம்
11-Jan-2025
சென்னை, நுங்கம்பாக்கம், மேற்கு மாட வீதியில் நிரோஷா, 38, என்பவர், 15 லட்சம் ரூபாய் குத்தகைக்கு வீடு எடுத்து, 2013ம் ஆண்டு முதல் வசித்து வந்தார்.அவரிடம் வீட்டின் உரிமையாளர் யசோதா, அவரது மகள் மற்றும் மருமகனின் வியாபாரத்திற்காக, 2014ம் ஆண்டு முதல் பல தவணையாக, 23.5 லட்சம் பணம் வாங்கி உள்ளனர். மேலும் வீட்டின் உரிமையாளர் யசோதாவின் பேத்திக்கு, 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றபோது, கடனாக பணம் கேட்டபோது, 13.5 சவரன் நகை கொடுத்து நிரோஷா உதவி உள்ளார்.இந்த நிலையில் வீட்டை காலி செய்யும்படி, நிரோஷாவிடம் உரிமையாளர் யசோதா தெரிவித்துள்ளார். அதற்கு, வீட்டை காலி செய்ய வேண்டும் என்றால், குத்தகை பணம் மற்றும் கடனாக வாங்கிய பணம், நகை அனைத்தையும் திருப்பித்தர வேண்டும் என, நிரோஷா தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் நிரோஷா வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டின் உரிமையாளர் யசோதா மற்றும் அவரது மகன் குமார், மனைவி லதா உள்ளிட்டோர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர்.நிரோஷாவின் சேலையை பிடித்து இழுத்து, அடித்து வெளியேற்றியதுடன் வீட்டிலிருந்த பொருட்களை துாக்கி சாலையில் வீசி உள்ளனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், குமார், 52, மற்றும் அவரது மனைவி லதா, 47, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
11-Jan-2025