செவிலியரை வெட்டி போன் பறிப்பு
அமைந்தகரை, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேவிட், 22; செவிலியர். இவர், அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, நெல்சன் மாணிக்கம் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த நபர், டேவிட்டிடம் அவசரமாக ஒருவரிடம் பேச வேண்டும் என, மொபைல் போனை கேட்டுள்ளார். மொபைல் போனை வாங்கிய நபர், தன் பாக்கெட்டில் வைத்து தப்ப முயன்றார். அவரை தடுத்தபோது, மறைத்து வைத்திருந்த பிளேடால், டேவிட்டின் இடது கன்னத்தை கிழித்து மர்ம நபர் மொபைல் போனுடன் தப்பினார்.டேவிட் அளித்த புகாரின்படி, அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.