உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் கைவரிசை ஒடிசா வாலிபர் சென்ட்ரலில் கைது

ரயிலில் கைவரிசை ஒடிசா வாலிபர் சென்ட்ரலில் கைது

சென்னை: சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம், சாலிமருக்கு, கோரமண்டல் விரைவு ரயில், கடந்த 21ம் தேதி காலை புறப்பட்டது. இந்த ரயிலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சவுமியா மொண்டல் பயணம் செய்தார். ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில், அவரது லேப்டாப், அடையாள அட்டை, வங்கி அட்டை உள்ளிட்டவை அடங்கிய பை மாயமானது.இது தொடர்பாக, சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, குற்றவாளியை தேடிவந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இரண்டாம் வகுப்பு பயணியர் ஓய்வறை அருகே சந்தேகப்படும்படியாக நின்ற, ஒடிசாவை சேர்ந்த திரிநாத் குமார், 39 என்பவரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தனர். அப்போது, மூன்று மொபைல் போன்கள், டேப், மடிக்கணினி ஆகியவை இருந்தன. ரயில்களில் பயணியரிடம் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை