உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது

 ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது

சென்னை: ஒடிசாவில் இருந்து விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட, 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில், சென்னைய எழும்பூரில், நேற்று முன்தினம் இரவு வந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் பெட்டிகளில் சோதனை நடத்தினர். அதில் வந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சுபம் சாகு, 19, என்பவரின் உடைமைகளில் ஐந்து பண்டல்களில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா இருந்தது. அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்து வருவதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவேற்காடு, ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த சத்யா, 27, அவரது தகவலின்படி தேனியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், 24, எடப்பாளையம் மணி, 21, செங்குன்றம் அஸ்வின், 21, ஆகியோரை, திரு.வி.க.,நகர் போலீசார், நேற்று கைது செய்தனர். 8 கிலோ கஞ்சா பறிமுதல் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஷாஜன், 23. இவர், அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில், நேற்று கைமாற்ற காத்திருந்தார். அப்போது, திருவான்மியூர் போலீசாரிடம் சிக்கினார். அவருடன் இருந்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற சேலையூரைச் சேர்ந்த ஹரிசுதன், 23, பிரபாகரன், 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ