மேலும் செய்திகள்
ரூ.7 கோடியில் பல வசதிகளுடன் விளையாட்டு திடல்
05-Nov-2024
அம்பத்துார் அடுத்த சோழபுரத்தைச் சேர்ந்தவர் அன்னபூரணி, 45. இவர் கோயம்பேடு, சின்மயா நகர், காளியம்மன் கோவில் தெருவில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.ஆனால், சரியாக ஜி.எஸ்.டி., வரி கட்டவில்லை என, புகார் எழுந்தது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் ஆறு பேர், நேற்று முன்தினம் இந்த அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, உடற்பயிற்சி கூட மேலாளர் மற்றும் உடற்பயிற்சி செய்ய வந்தவர்கள் என 40 பேர் சேர்ந்து, ஆய்வு மேற்கொள்ள சென்ற ஜி.எஸ்.டி., அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கோயம்பேடு போலீசில், நேற்று காலை புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Nov-2024