உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறந்து அழுகும் ஆமைகளால் சுகாதார சீர்கேடு எல்லை பிரச்னையால் அகற்றாத அதிகாரிகள்

இறந்து அழுகும் ஆமைகளால் சுகாதார சீர்கேடு எல்லை பிரச்னையால் அகற்றாத அதிகாரிகள்

சென்னை, 'பெஞ்சல்' புயலுக்கு பின், சென்னை மாவட்டம் உத்தண்டி முதல் செங்கல்பட்டு மாவட்டம் கானத்துார் வரை, கடற்கரை பகுதியில், அடுத்தடுத்த நாட்களில் ஐந்து ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. எல்லை பிரச்னையை காரணம் காட்டி, ஒரு வாரமாக அவை அகற்றப்படவில்லை.இதுகுறித்து, நடைபயிற்சி செய்வோர் கூறியதாவது: ஆமைகள் இறந்து கிடக்கும் விபரத்தை, வேளச்சேரி அலுவலகத்தில் கூறியபோது, 'அது எங்கள் எல்லையில் இல்லை; செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது' எனக் கூறினர். திருப்போரூர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது, 'வேளச்சேரி அலுவலகம் தான் அகற்ற வேண்டும்' என்றனர்.எல்லை பிரச்னையால், இறந்த ஆமைகள் அகற்றப்படாமல், கடும் துர்நாற்றம் வீசுகிறது. நடை பயிற்சி மேற்கொள்வோர் சுவாச பிரச்னைக்கு ஆளாகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எல்லை நிர்ணயம் செய்ததில், நிர்வாக ரீதியாக குளறுபடி இருப்பது உண்மை தான். கடற்கரை பகுதிகளை கண்காணிக்க, போதுமான ஊழியர்களும் இல்லை. இதனால், இறந்த ஆமைகளை உடனுக்குடன் அகற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இரண்டு அலுவலகமும் பேசி இறந்த ஆமைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை