உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொதுமக்களின் அடுத்தடுத்த குற்றச்சாட்டு பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள் கிராம சபையில் சலசலப்பு

பொதுமக்களின் அடுத்தடுத்த குற்றச்சாட்டு பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள் கிராம சபையில் சலசலப்பு

நெமிலிச்சேரி: நெமிலிச்சேரியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பொதுமக்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, நெமிலிச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பூந்தமல்லி ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் சேகர் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் 15 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டன. அப்போது, ஊராட்சியில் எந்த பணிகளும் முறையாக நடக்கவில்லை என பொதுமக்கள், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். அவை:  குப்பை கழிவுகள் முறை யாக அப்புறப்படுத்துவது இல்லை. முறையாக கொசு மருந்து அடிப்பதில்லை. கழிவு நீர் தேங்கியுள்ள இடங்களை சுத்தம் செய்து 'பிளீச்சிங் பவுடர்' தெளிப்பதில்லை  ஐந்து ஆண்டுகளாகியும் பல இடங்களில் சாலை அமைக்கப்படவில்லை. தெருக்களில் மின் விளக்குகள் சரியாக எரியவில்லை  கொசு உற்பத்தி அதிகரித்து மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. நாய்கள் தொல்லையும் அதிகரித்து வருகிறது  சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டதில் இருந்து, ஊராட்சியில் எந்த பணியும் முறையாக நடக்கவில்லை. உங்களால் முடியவில்லை என்றால் கலெக்டரிடம் எழுதி கொடுத்து விட்டு செல்லுங்கள் என, பொதுமக்கள் கொந்தளித்தனர். குறுக்கீடு உடனே, முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி தலையிட்டு பதில் அளிக்கவே, அதிகாரிகள் இருக்கும்போது, முன்னாள் தலைவர் எப்படி பேசலாம் என பொதுமக்கள் கூச்சலிட்டனர். அப்போது பேசியவர்கள், 'எல்லாருக்கும் செய்து விட்டேன், செய்து விட்டேன் என்று சொன்னீர்களே. 'எங்கள் தெருவுக்கு என்ன செய்தீர்கள். இதுவரை சாலை கூட அமைக்கவில்லை' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பத்துடன் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி