உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒக்கியம்மடுவை கண்காணித்த பிரியாணி

ஒக்கியம்மடுவை கண்காணித்த பிரியாணி

சென்னை:சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., ஒக்கியம்மடு வழியாக, 64 ஏரிகளின் வெள்ளம் செல்கிறது.இதனால், மடுவில் அடைப்பு ஏற்படாமல் பார்க்கவும், சுற்று வட்டார பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் கண்காணிக்க, வார்டு முழுதும், 110 மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு நாட்களாக இரவு பகலாக பணிபுரிந்தனர்.அவர்களுக்கு, 198வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் லியோ என்.சுந்தரம், நேற்று மதிய உணவு பிரியாணி வழங்கினார்.அதேபோல், 195வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஏகாம்பரம், ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம் சுற்று வட்டார பகுதியில், இரண்டு நாட்கள் நலச்சங்கத்தினருடன் சேர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட்டார். மாநகராட்சி ஊழியர்கள் சோர்வில்லாமல் பணி செய்ய, பிரியாணி வாங்கி கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ