மேலும் செய்திகள்
மொபைல் போன் பறிப்பு: இருவர் கைது
25-Oct-2024
சென்னை:கோட்டூர்புரம், ஏரிக்கரை சாலையைச் சேர்ந்தவர் கணேசன், 52. கடந்த 21ம் தேதி, பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது, முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மொபைல் பறிப்பில் ஈடுபட்ட, திருவான்மியூரைச் சேர்ந்த ராகுல், 19, நிதீஷ்குமார், 18, ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவான முபாரக் பாஷா, 22, என்பவரை தேடி வந்தனர். நேற்று இவரை கைது செய்த போலீசார், 4 மொபைல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
25-Oct-2024