உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேன் ஏறி ஒருவர் பலி

வேன் ஏறி ஒருவர் பலி

அண்ணா நகர்: அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலை, கலெக்டர் காலனியில் தனியார் நிறுவனத்தின் கிடங்கு செயல்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல் கிடங்கில் இருந்து சரக்குகளை வேனில் ஏற்றிய பின், ஓட்டுநர் வேனை எடுத்துள்ளார். அப்போது, சாலையோரத்தில் படுத்திருந்தவர் மீது, சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். அமைந்தகரை போலீசாரின் விசாரணையில் கலெக்டர் காலனி பகுதியைச் சேர்ந்த கோபி, 59, என்பதும், மது போதையில் சாலையில் படுத்திருந்ததும் தெரிந்தது. அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை