உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரியில் பைக் மோதி ஒருவர் பலி

லாரியில் பைக் மோதி ஒருவர் பலி

ஸ்ரீபெரும்புதுார்: ஆவடி, புது வெள்ளாலுார், சாந்தி நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 42, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம், ஹெல்மெட் அணியாமல் 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் சென்று, இரவில் வீட்டிற்கு திரும்பினார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் கிழக்கு புறவழிச்சாலை சந்திப்பு அருகே வந்த போது, பெங்களூரில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி முன்னால் சென்ற, டேங்கர் லாரியில் மோதி கீழே விழுந்தார்.இதில், சிவக்குமாரின் இடது கால் நசுங்கி படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை