உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சரக்கு வேன் மோதி ஒருவர் பலி

சரக்கு வேன் மோதி ஒருவர் பலி

மடிப்பாக்கம் :மடிப்பாக்கம், கண்ணகி நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன், 55. மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.நேற்று மதியம், பொன்னியம்மன் கோவில் தெருவில், சாலையோரம் வாகனத்தில் விற்ற மாம்பழங்களை வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, புழுதிவாக்கத்தில் இருந்து மடிப்பாக்கம் நோக்கி வந்த லோடு வேன், அவர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார்.குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் வாயிலாக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பரங்கிமலை போக்குவரத்து புலானய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, வேன் ஓட்டுனரான கெருகம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ்குமார், 29, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ