கள்ளத்தொடர்பு விவகாரம் ஒருவருக்கு சரமாரி வெட்டு
பெரம்பூர், பெரம்பூர், மரியநாயகம் முதல் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர், 38. இவர், அயனாவரத்தில் உள்ள பைக் விற்பனையகத்தில் பணி புரிகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது வீடு புகுந்த கும்பல், அவரிடம் தகராறு செய்து, கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டி தப்பியது.ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனசேகருக்கு, தலையில் 20 தையல்கள் போடப்பட்டன. இது குறித்து திரு.வி.க., நகர் போலீசார் விசாரித்தனர்.இதில், தனசேகரின் மனைவிக்கும், அருண் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அருணின் மனைவி திரு.வி.க., நகர் போலீசில் அளித்த புகாரின்படி, அருண் மற்றும் தனசேகரின் மனைவியை எச்சரித்து போலீசார் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில், அருண் கூட்டாளிகளுடன் சேர்ந்து, தனசேகரை வெட்டியது தெரிய வந்தது.இந்த வழக்கில், பெரம்பூரைச் சேர்ந்த அருண் என்கிற அருணாசலம், 28, தேவராஜ், 22, கொளத்துாரைச் சேர்ந்த வினோத், 34, ஆகாஷ், 21, மற்றும் இமாம் ஜாபர் சாதிக்அலி, 22, ஆகிய ஐந்து பேரை, திரு.வி.க.நகர் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.