மெட்ரோ ரயில் மேலாளராக பெண்களுக்கு வாய்ப்பு
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சித்திக் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உள்ளமைப்பு பணியாளர்களில், 21 சதவீதம் பேர்; வெளி ஒப்பந்த பணியாளர்களில், 50 சதவீதம் பேர் பெண்கள். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பெண்களால் மட்டுமே இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களை நிறுவ ஆய்வு செய்து வருகிறோம். தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உள்ளோம். பெண் பொறியாளர்களுக்கான, எட்டு உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, பிப்., 10 கடைசி நாள். மேலும் தகவல் பெற, https://chennaimetrorail.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.