மேலும் செய்திகள்
டாஸ்மாக் அகற்ற போராட்டம்
24-Jul-2025
பொன்னேரியில் நாம் தமிழர் கட்சி கூட்டம்
19-Jul-2025
துரைப்பாக்கம் :துரைப்பாக்கம், பி.எஸ்.ஆர்., மாலில் இயங்கிவரும் பி.வி.ஆர்., திரையரங்குகளில் 'கிங்டம்' தெலுங்கு திரைப்படம், திரையிடக்கூடாது என, அதன் மேலாளரிடம், நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர். 'கிங்டம்' எனும் தெலங்கு திரைப்படத்தில், ஈழத் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளதாகவும், அதை திரையிடுவதை நிறுத்த வேண்டும் எனவும், தவறினால், திரையரங்கில் போராட்டம் நடைபெறும் எனவும், நாம் தமிழர் கட்சி சோழிங்கநல்லுார் மண்டலம் சார்பில், திரையரங்கு மேலாளரிடம் நேற்று மாலை 3:30 மணிக்கு மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர், உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பதாக கூறினார்.
24-Jul-2025
19-Jul-2025