அப்பல்லோவில் வாய் புற்றுநோய் பரிசோதனை திட்டம் துவக்கம்
சென்னை, உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஈஷா அமைப்பு சார்பில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.இதுகுறித்து, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் சந்தீப் துவாரா, நவீன் ஹெட்னே, பிரவீண், சுசீலா ஆகியோர் கூறியதாவது:புற்றுநோய் பாதிப்புகளை பொருத்தவரை, வாய் புற்றுநோய் அதிக தாக்கத்தையும், பரவலையும் கொண்டதாக கருதப்படுகிறது.இவ்வாறு பாதிக்கப்படுவோரில், உலக அளவில் மூன்றில் ஒருவர் இந்தியர் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.இந்தியாவில் ஆண்டுதோறும், 77,000 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது. தாமதமாக நோயறியப்படுவதால், 50 சதவீதம் பேர் உயிரிழக்க நேரிடுகிறது.புகையிலை பழக்கம், புகைப் பழக்கம் கொண்டவர்களுக்கும், 30 வயதைக் கடந்த அனைவருக்கும், அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ஈஷா அமைப்பு சார்பில், வாய் புற்றுநோய் பாதிப்பை தொடக்க நிலையில் அறியும் சோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.***