உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை கடைகளை "லிங் சாலைக்கு மாற்ற உத்தரவு

நடைபாதை கடைகளை "லிங் சாலைக்கு மாற்ற உத்தரவு

சென்னை : அண்ணாசாலை அருகே, பின்னி சாலையையும், டாம்ஸ் சாலையையும் இணைக்கும், 'லிங்' சாலையில், நடைபாதை கடைகளை மாற்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அண்ணசாலையில், போதிய வாகன நிறுத்தம் இல்லாமல், கடைகளுக்கு வருவோர் பெரும் இடையூறுக்கு ஆளாகி வந்தனர். 'லிங்' சாலையில், வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மூலம் இப்பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்பட்டு உள்ளது.இதற்காக நீண்ட நாட்களாக பயனில்லாமல் கிடந்த 'லிங்' சாலை தற்போது சீரமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டு உ ள்ளது. வாகன நிறுத்துமிடம் தனியார் வசம் அளிக்கப்படுகிறது. இதனால், கட்டண வாகன நிறுத்துமிடமாக லிங் சாலையின் ஒரு பகுதி இருக்கும். மீதமிருக்கும் இடம் சிறு கடைகள் அமைக்க ஒதுக்கப்பட்டு உள்ளது. அண்ணாசாலையில், போக்குவரத்துக்கும், நடைபாதைக்கும் இடையூறாக இருக்கும் 170 கடைகள், 'லிங்' சாலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு மாற்றப்படுகிறது.இதன்மூலம், அண்ணாசலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சீராக்குவதோடு, நடைபாதைக் கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கப்படுகிறது. நடைபாதைக் கடைகளை உடனடியாக 'லிங்' சாலைக்கு மாற்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, கூறிய மேயர் சுப்ரமணியன்,''லிங் சாலையின் ஒரு பகுதியில் நடைபாதைக் கடைகள் அமைக்கப்படுகின்றன. மாதம் 100 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், அண்ணாசாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சிறு கடைகள் மாற்று இடம் அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.வாகன நிறுத்துமிடத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதி, டெண்டர் விடப்பட்டு தனியாருக்கு அளிக்கப்படுவதால், வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வர ஓரிரு மாதங்களாகும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்