மேலும் செய்திகள்
வீடு ஒப்படைப்பு தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு
25-Sep-2024
சென்னை, அரைகுறை நிலையில், தாமதமாக வீட்டை ஒப்படைத்த நிறுவனம் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசை குத்தம்பாக்கம் கிராமத்தில், 'டாடா வேல்யு ஹோம்ஸ்' என்ற நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், 79.66 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்க, ரகோத்தமன் சங்கர், சாரதா சங்கர் ஆகியோர் இணைந்து, 2016ல் ஒப்பந்தம் செய்தனர். வீட்டை, 2017ல் ஒப்படைப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 13 மாதங்கள் தாமதமாக, அதுவும் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகள் முழுமையாக முடியாமல், குறைபாடுகளுடன் வீடு ஒப்படைக்கப்பட்டதாக, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தனர்.இது குறித்து ரியல் எஸ்டேட் ஆணையத்தின் விசாரணை அதிகாரி உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. அதில் குறைபாடுகள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக மூன்று லட்ச ரூபாய், வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
25-Sep-2024