உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 296 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு

296 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு

சென்னை, சென்னை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளர் என்.எழிலரசு. இவர் உட்பட 908 பேர் தினக்கூலி தொழிலாளர்களாக, கொட்டிவாக்கம் பஞ்சாயத்து, சென்னையைச் சுற்றிய மற்ற பஞ்சாயத்துகளில் துப்புரவு பணியில் சேர்ந்தனர்.சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது, இந்த பஞ்சாயத்துகள் எல்லாம் மாநகராட்சிக்குள் கொண்டு வரப்பட்டன.அப்போது, தினக்கூலி தொழிலாளர்கள் சிலர், ஐகோர்ட் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்; பலரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இந்நிலையில், தங்களையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட கோரி, எழிலரசு உட்பட 295 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, ''தினக்கூலி தொழிலாளர்களை சென்னை மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியத்தில், ஏற்கனவே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, மனுதாரர்கள் 295 பேரையும், ஆறு வாரத்துக்குள், மாநகராட்சி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை