மேலும் செய்திகள்
இழப்பீடு தராத கட்டுமான நிறுவனத்திற்கு 'வாரன்ட்'
27-Sep-2024
சென்னை, 'ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை விட தாமதமாக வீட்டை ஒப்படைத்த கட்டுமான நிறுவனம், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும்' என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரம்பூரில், 'நார்த் டவுன் எஸ்டேட்ஸ்' நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் வீடு வாங்க, ஹரிஹரன் ஏகாம்பரம் என்பவர், 2011ல் முன்பதிவு செய்தார்.இதற்காக, 83.02 லட்சம் ரூபாயை, பல்வேறு தவணைகளில் அவர் செலுத்தினார். இது தொடர்பான ஒப்பந்தத்தில், 2015ல் வீட்டை ஒப்படைப்பதாக, கட்டுமான நிறுவனம் உறுதி அளித்து இருந்தது. ஆனால், குறிப்பிட்ட கால அட்டவணைப்படி, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், 2019ல் தான், அந்நிறுவனம் வீட்டை ஒப்படைத்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்ட ஹரிஹரன் ஏகாம்பரம், இழப்பீடு கோரி ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார். இது தொடர்பாக, ஆணைய விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: இதில், குறிப்பிட்ட கட்டுமான திட்டத்தை செயல்படுத்தியதில், இரண்டாவது நபராக சேர்க்கப்பட்டுள்ள நில உரிமையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.ஆனால், முதலாவது நபரான கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, கட்டுமான நிறுவனம் குறித்த காலத்தில் வீட்டை ஒப்படைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கு செலவிற்காக, 1 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
27-Sep-2024