கோட்டூர்புரத்தில் நம்ம பசங்க அங்காடி
சென்னை:'வித்யா சாகர்' அமைப்பு சார்பில், 'நம்ம பசங்க அங்காடி - 2025' என்ற தலைப்பில், கைவினை பொருட்கள் கண்காட்சி, கோட்டூர்புரம், ரஞ்சித் சாலையில் உள்ள வித்யாசாகர் அமைப்பு அலுவலகத்தில், நேற்று துவங்கி இன்று நிறைவடைகிறது. மாற்றுத்திறனாளிகள் வடிவமைத்த காகித நாட்குறிப்பு, எழுதுபொருட்கள், பாய்கள், பைகள் மற்றும் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், மாநிலம் முழுதும் பல்வேறு மாற்றுத் திறனாளி அமைப்புகளின், 20க்கும் மேற்பட்ட 'ஸ்டால்'கள் வைக்கப்பட்டு உள்ளன.