மேலும் செய்திகள்
பெண்ணிடம் வம்பு செய்த இருவர் கைது
02-Apr-2025
புளியந்தோப்பு:புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு, 13 வயதில் மகள் உள்ளார். இவர், அருகே உள்ள பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம், வீட்டருகே உள்ள கடைக்கு தாய் சென்றுள்ளார். சிறுமி, வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த, அதே பகுதியைச் சேர்ந்த பெயின்டரான விஜயகுமார், 47, சிறுமியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.வீடு திரும்பிய தாயிடம், இது குறித்து சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, புளியந்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், விஜயகுமாரை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
02-Apr-2025