உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துணைத்தலைவராக பழனியப்பன் தேர்வு

துணைத்தலைவராக பழனியப்பன் தேர்வு

சென்னை, மகப்பேறு மற்றும்மகளிர் நல டாக்டர்கள்கழகங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவராக டாக்டர் பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து, சென்னை போரூர் ராமச்சந்திரா கல்வி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:மும்பையில், சமீபத்தில் நடந்த ஆண்டு விழாவில், மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் கழகங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவராக, ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துறை தலைவர் டாக்டர் பழனியப்பன்தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த கூட்டமைப்பின், 45,000 உறுப்பினர்கள் கல்வி, விழிப்புணர்வு, பன்னாட்டு கூட்டு முயற்சிகள் வாயிலாக, மருத்துவ சிகிச்சைகளின் தரம் உயர்வதற்கும், தாய் சேய் மரணங்களை குறைப்பதற்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை