உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் வரும் 3ல் பங்குனி பெருவிழா துவக்கம்

கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் வரும் 3ல் பங்குனி பெருவிழா துவக்கம்

சென்னை, யிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழா நாளை மறுநாள் கோலாகலமாக துவங்குகிறது.மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு பங்குனி பெருவிழாவின் துவக்கமாக வரும் 3ம் தேதி காலை 7:35 மணி முதல் 8:10 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. அடுத்த நாள் காலை 9:15 மணிக்கு வெள்ளி சூரிய வட்டமும், இரவு 9:00 மணிக்கு சந்திரவட்ட சேவையும் நடக்கிறது.தேர்த்திருவிழாவரும் 5ம் தேதி அதிகாலை 6:00 மணிக்கு அதிகாரநந்தி காட்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து, கந்தர்வன், கந்தர்வி, மூஷிகம், வெள்ளிவிடை வாகனங்கள் புறப்பாடும், திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழாவும் நடக்கிறது. 7ம் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகன காட்சி நடக்கிறது.பிரதான நிகழ்வாக 9ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:15 மணிக்கு பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது.வரும் 10ம் தேதி மாலை 3:30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது.ஐந்திருமேனிகள் விழா ஏப்.,11ம் தேதி நடக்கிறது. ஏப்., 12ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. அன்று இரவு, 7:45 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. எப்., 14ம் தேதி முதல் விடையாற்றி நிகழ்ச்சிகள் துவங்குகிறது.மருந்தீஸ்வரர் கோவில்திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோவிலில், 3ம் தேதி இரவு 8:30 மணி முதல் 9:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா துவங்குகிறது.வரும் 4ம் தேதி காலை சந்திரசேகரர் சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் அருள்பாலிக்கிறார். 5ம் தேதி காலை 6:00 மணிக்கு அதிகார நந்தி சேவை நடக்கிறது.சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்தில் பிருங்கி முனிவருக்கு காட்சியருளல் நிகழ்வு 6ம் தேதி காலை நடக்கிறது. சந்திரசேகரர் தொட்டி விழா 7ம் தேதி காலை நடக்கிறது.பங்குனி பெருவிழாவின் பிரதான நாளான 9ம் தேதி காலை 6:30 மணிக்கு, தேர்த்திருவிழா, பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சந்திரசேகரர் புஷ்ப விமானத்தில் திருவீதி உலா நடக்கிறது.வரும் 10ம் தேதி மாலை பரிவேட்டை விழாவும், 11ம் தேதி, கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம், விமானக்காட்சி, வன்னிமரக்காட்சியும் நடக்கிறது. அன்று மாலை அகத்தியருக்கு திருமணக்காட்சி, வன்னிமரக்காட்சி நிகழ்வு நடக்கிறது.சந்திரசேகரர் கடல் நீராடல் உற்சவம் ஏப்., 12ம் தேதி காலை நடக்கிறது. அன்று இரவு திரிபுரசுந்தர சுந்தரி-தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து வான்மீகி முனிவருக்கு, 18 திருநடனக் காட்சியருளி வீடுபேறு அளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவின் கடைசி நாளான, ஏப்., 13ம் தேதி மாலை சந்திரசேகர் தெப்பத் திருவிழா, இரவு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, 18 திருநடன காட்சி ஆகியவை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ