உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அங்காள ஈஸ்வரி கோவில் பங்குனி உத்திர திருவிழா

அங்காள ஈஸ்வரி கோவில் பங்குனி உத்திர திருவிழா

செங்குன்றம், அங்காள ஈஸ்வரி கோவிலில் பங்குனி உத்திர தீ மிதி திருவிழா, பால்குட அபிஷேகம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரில் உள்ள முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவிலின், 59ம் ஆண்டு பங்குனி உத்திர தீ மிதி திருவிழா, நேற்று காலை பால்குட அபிஷேகத்துடன் துவங்கியது.மாலையில் காப்பு கட்டுதல் மற்றும் சிறப்பு பூஜைகளுடன், கொடியேற்ற உற்சவம் நடந்தது.அதை தொடர்ந்து, காப்பு கட்டும் பக்தர்கள் விரதம் இருந்து, 24ம் தேதி மாலை 4:00 மணி அளவில் தீ மிதிப்பர். கோவில் நிர்வாகம் மற்றும் விழாக் குழுவினர், தீ மிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ