உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனியில் வீட்டு வாசலில் கிடந்த மண்டை ஓடால் பீதி

வடபழனியில் வீட்டு வாசலில் கிடந்த மண்டை ஓடால் பீதி

வடபழனி:வடபழனியில் வீட்டு வாசலில் கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளால், குடும்பத்தினர் பீதியில் அலறியடித்து வெளியேறினர்.வடபழனி, சோமசுந்தர பாரதியார் நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன், 51. இவர், கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார்.நேற்று காலை வீட்டில் இருந்து எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் மனித மண்டை ஓடு மற்றும் ஐந்து எலும்புகள் இருந்தன. அதிர்ச்சி அடைந்த கருணாகரன் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்து வெளியேறினர். இச்சம்பவம் காட்டுத்தீ போல பரவ, பகுதிமக்கள் அங்கு குவிந்தனர்.கருணாகரன் வசிக்கும் வீட்டின் அருகே, சிறிது துாரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது. விஷமிகள் யாராவது அங்கிருந்து எலும்புகள் எடுத்து வந்து, அச்சுறுத்துவதற்காக போட்டிருக்கலாம் அல்லது மந்திரவாதிகளின் வேலையாக இருக்கலாம் என கூறப்பட்டது.இந்த நிலையில், வடபழனி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கருணாகரன் மகனின் நண்பனான ஆரிப் அலிகான், 35, என்பவர், இச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை