உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனின் உதட்டு கட்டிக்கு மாறாக மர்ம உறுப்பில் அறுவை சிகிச்சை பெற்றோர் மருத்துவமனை முற்றுகை

சிறுவனின் உதட்டு கட்டிக்கு மாறாக மர்ம உறுப்பில் அறுவை சிகிச்சை பெற்றோர் மருத்துவமனை முற்றுகை

சென்னை:ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த, 9 வயது சிறுவனுக்கு, உதட்டில் கட்டி வந்ததால், மிகவும் அவதிப்பட்டுள்ளார்.இதனால் சிறுவனை, டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, பெற்றோர், கடந்த 22ம் தேதி அழைத்து சென்றனர்.அங்கு, சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர், ரத்த பரிசோதனை எடுக்க சொல்லியுள்ளார். மேலும், அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்றிவிடுவோம் எனவும் கூறியுள்ளார்.அதன்படி, நேற்று முன்தினம், சிறுவனை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில், உதட்டில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதில், சிறுவனின் மர்ம உறுப்பில் பிற மதத்தினர் மேற்கொள்ளும் சிகிச்சையை செய்துள்ளார்.இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கேட்டதற்கு, 'வேறு ஞாபகத்தில் செய்துவிட்டேன்' என அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர், அன்றிரவு, உறவினர்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.சம்பவம் அறிந்து வந்த ஐஸ்ஹவுஸ் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டரை, நேற்று காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை