உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் 4 ஆண்டுக்கு பின் பார்க்கிங் வசதி

பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் 4 ஆண்டுக்கு பின் பார்க்கிங் வசதி

சென்னை, நான்கு ஆண்டுகளுக்குப்பின், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில், வாகன நிறுத்தும் வசதி மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.சென்னை சென்ட்ரலை அடுத்துள்ள பேசின்பிரிட்ஜ் சந்திப்பு ரயில் நிலையம் முக்கியமானது. இந்த நிலையத்தில் இருந்து, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என, இரு வழித்தடங்களாக ரயில்கள் பிரிந்து செல்லும். இங்குள்ள ரயில் நிலையத்தில் தினமும், 10,000த்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.இதில், 2,000த்துக்கும் மேற்பட்டோர், தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையத்தில் இருந்த வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்கும் புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், இந்த நிறுத்தம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இதனால், வாகனங்களை நிறுத்த வழியின்றி பயணியர் அவதிப்பட்டனர்.தற்போது, புதிய ஒப்பந்ததாரர்கள் தேர்வாகி உள்ளதால், 2020க்குப்பின், நேற்று முதல் இந்த வாகன நிறுத்தம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதல் 12 மணி நேரம் வரையில் சைக்கிளுக்கு 10 ரூபாய், இருசக்கர வாகனத்துக்கு 15 ரூபாய்; மாதாந்திர கட்டணமாக சைக்கிளுக்கு 200 ரூபாய், இருசக்கர வாகனத்துக்கு 450 ரூபாய் என, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நான்கு ஆண்டுகளுக்குப்பின், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் வசதி மீண்டும் வந்துள்ளதால், பயணியர் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை