மேலும் செய்திகள்
மாமூல் வசூலிக்கும் 'சார்' யாரு?
10-Nov-2025
சென்னை: 'இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில், வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை, எங்கள் பரிந்துரை அடிப்படையில், தமிழக நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்த உள்ளது' என, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான 'கும்டா'வின் உறுப்பினர் செயலர் ஜெயகுமார் தெரிவித்தார். நம் நாளிதழில், 'இ.சி.ஆரில் வாகன நிறுத்துமிடங்கள் திட்டத்தை கும்டாவிடம் இருந்து பறிக்கிறது நெடுஞ்சாலை ஆணையம்' என்ற தலைப்பில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது: இதுகுறித்து, கும்டா அமைப்பின் உறுப்பினர் செயலர் ஜெயகுமார் அளித்துள்ள விளக்கம்: இ.சி.ஆரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முறையான வாகன நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய, கும்டாவை நெடுஞ்சாலை துறை அணுகியது. இதன் அடிப்படையில், வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டம், கும்டா பரிந்துரைப்படி, தமிழக நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை உருவாக்குவதில், வாகன கணக்கெடுப்பு, வாகன நிறுத்துமிட தேவை போன்ற விபரங்களை, நெடுஞ்சாலை துறைக்கு அளிக்கும். இது தொடர்பான பரிந்துரைகளை கும்டா வழங்கும். இ.சி.ஆர்., சாலையில் போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள், 'கல்பதரு டெக்னாலஜிஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வாகன நிறுத்துமிட கணக்கெடுப்பு முறையாக நடக்கவில்லை; போதுமான கணக்கெடுப்பாளர்கள் இல்லை. இதனால், அந்நிறுவனத்தால் தரமான தகவல்களை சேகரிக்க இயலவில்லை என்பது தெரியவந்தது. கணக்கெடுப்பில் தவறுகள் இருந்ததால், விதிகளின் அடிப்படையில், கல்பதரு நிறுவனத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-Nov-2025