உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போன் பறித்த வாலிபரை நையப்புடைத்த பயணியர்

போன் பறித்த வாலிபரை நையப்புடைத்த பயணியர்

அம்பத்துார், பிப். 19--அம்பத்துார், ராம் நகரைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர், 34; தனியார் நிறுவன உதவி மேலாளர். இவர், பணி முடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக, அம்பத்துார் தொழிற்பேட்டையில் இருந்து ஆவடி செல்லும், தடம் எண்: 70ஏ பேருந்தில், நேற்று முன்தினம் இரவு ஏறியுள்ளார்.பேருந்தில், விஜயபாஸ்கரின் பின்னால் நின்றிருந்த வாலிபர், அவரது மொபைல் போனை 'பிக் பாக்கெட்' அடித்து தப்ப முயன்றார். இதை கண்ட சக பயணியர், அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, 'நையப்புடைத்து' அம்பத்துார் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.விசாரணையில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த உதயகுமார், 24, என தெரிய வந்தது. அவரிடமிருந்து மொபைல்போனை பறிமுதல் செய்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை