உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹைதராபாத் விமானத்தில் பயணிக்கு நெஞ்சு வலி

ஹைதராபாத் விமானத்தில் பயணிக்கு நெஞ்சு வலி

சென்னை,சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில், பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் 'இண்டிகோ' விமானம், நேற்று காலை 6:00 மணிக்கு புறப்பட்டது. இதில் 164, பயணியர் இருந்தனர்.விமானம் ஓடுபாதையில் ஓடத் துவங்கியபோது விமானத்தில் இருந்த ஆண் பயணி ஒருவருக்கு, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பணிப்பெண்கள், விமானியிடம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, விமானம் ஓடுபாதையிலே அவசரமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் நடைமேடைக்கு வந்தது. விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் பயணியை கீழே இறக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின், விமானம் காலை 7:00 மணிக்கு புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ