உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாமதமாக இயக்கப்படும் ரயில் மதுராந்தகத்தில் பயணியர் போராட்டம்

தாமதமாக இயக்கப்படும் ரயில் மதுராந்தகத்தில் பயணியர் போராட்டம்

மதுராந்தகம், விழுப்புரம், திண்டிவனம், அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார், மதுராந்தகம், செங்கல்பட்டு வழியாக, தாம்பரம் வரை பயணியர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பகுதிகளில் இருந்து, நாள்தோறும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் தாம்பரம், சென்னை போன்ற நகர பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் என, நுாற்றுக்கணக்கானோர் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர், விழுப்புரம்- - தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயிலை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாள்தோறும் காலை 6:40க்கு வரவேண்டிய ரயில், நேற்று காலதாமதமாக காலை 7:05 மணிக்கு வந்தது.இதனால் ஆத்திரமடைந்த ௫௦௦க்கும் மேற்பட்ட ரயில் பயணியர், சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற தேஜஸ் விரைவு ரயிலை மறித்து, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார் மற்றும் மதுராந்தகம் போலீசார், பயணியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர்.இதனால், ௧௫ நிமிடம் ரயில் தாமதமாக வந்ததால் நடந்த மறியல் போராட்டத்தால், மேலும் ௩௦ நிமிடம் தாமதமாக விரைவு ரயில் மற்றும் பயணியர் ரயில் இயக்கப்பட்டது.இது குறித்து, ரயில்வே நிர்வாகத்தினர் கூறியதாவது:பனி மூட்டம் காரணமாக, ரயிலை வழக்கமான வேகத்தில் இயக்க முடியவில்லை. மேலும், விழுப்புரம், திண்டிவனம், அச்சிறுபாக்கம் போன்ற நிறுத்தங்களில் அதிக அளவில் பயணியர் ஏறுவதால், கூடுதல் நேரம் ஆகிறது.இனி வரும் காலங்களில் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, குறித்த நேரத்தில் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை