போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்ற மக்கள்
பெரும்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகளில், 10 நாட்களாக சரியாக குடிநீர் வரவில்லை. குடிநீர் குழாயில் அழுத்தம் குறைவே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் புகார் அளிப்பதற்காக நேற்று, பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். தகவல் அறிந்த போலீசார், அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.குடிநீர் வாரிய உயர் அதிகாரிகளிடம் பேசி, குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.