உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணி நிரந்தரம்: நன்றி தெரிவித்த கோவில் பணியாளர்கள்

பணி நிரந்தரம்: நன்றி தெரிவித்த கோவில் பணியாளர்கள்

சென்னை: தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியனின் மாநில சிறப்பு மாநாடு, கடந்த 11ம் தேதி பாரிமுனையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் பிப்ரவரி மாதத்திற்குள், 1,500 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என உறுதியளித்தார். மேலும், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான வீட்டு வாடகைப்படி உயர்த்தி வழங்குதல், யூனியனுக்கு சென்னையில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்குதல் ஆகியவற்றையும், உடனடியாக நிறை வேற்றுவதாக தெரிவித்தார். மாநாட்டில் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், யூனியனின் சென்னை கோட்டத் தலைவர் தனசேகர், செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் தலைமையி லான நிர்வாகிகள், அமைச்சர் சேகர்பாபுவை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை