உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெரும்பாக்கம் மருத்துவமனையில் மாத்திரை பற்றாக்குறையால் அவதி

 பெரும்பாக்கம் மருத்துவமனையில் மாத்திரை பற்றாக்குறையால் அவதி

சென்னை: பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பா ட்டு வாரிய குடி யிருப்பில், 24 மணி நேரமும் செயல்படும், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, மாத்திரை பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு மாத்திரை வழங்காமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இரவு நேரத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால், செவிலியர்கள் இரவுப்பணியை தவிர்க்கின்றனர். சில நாட்களுக்கு முன், சுகாதார ஆய்வாளரை போதையில் இருந்த நபர் தாக்கிய சம்பவமும் நடந்தது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: இரவு நேரத்தில் போதை ஆசாமிகள் தொல்லை உள்ளதால், டாக்டர், செவிலியர், உதவியாளர்கள் பணிபுரியவே அச்சப்படுகின்றனர். பாதுகாப்புக்கு போலீசார் நியமித்தால், தைரியமாக இருப்போம். இங்கு ரத்த பரிசோதனை செய்யும் நோயாளிகளுக்கு, மாதாந்திர மாத்திரை வழங்குகிறோம். வேறு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, இங்கு மாத்திரை கேட்கும்போது, பற்றாக்குறை ஏற்படுகிறது. மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ