உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராதா நகர் சுரங்கப்பாதை பணிக்கு கூடுதல் நிலம் கேட்டு ரயில்வேயிடம் மனு

ராதா நகர் சுரங்கப்பாதை பணிக்கு கூடுதல் நிலம் கேட்டு ரயில்வேயிடம் மனு

குரோம்பேட்டை, குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியை, தினமும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.கேட் மூடும்போது, ஜி.எஸ்.டி., சாலை, ராதா நகர் சாலையில், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.இதனால் அங்கு, இலகு ரக வாகன சுரங்கப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2007ல் பணிகள் துவங்கின. பல கட்ட பிரச்னைகளுக்கு பின், 2024, மே மாதம் இச்சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இச்சுரங்கப்பாதை இருவழிப்பாதையாகும். ஆனால், அகலத்தை பார்த்தால், அதற்கு சாத்தியமில்லை என தெரிகிறது. அப்படியே பயன்படுத்தினாலும், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.அதனால், அகலத்தை அதிகரித்தால் மட்டுமே, இருவழிப்பாதைக்கு சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டு, ரயில்வே இடத்தில், 100 அடி நீளத்திற்கு, 10 அடி அகலம் நிலத்தை ஒதுக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரிடம், பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, நேற்று மனு கொடுத்தார். அதில், சுரங்கப்பாதையை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறக்க, கூடுதல் நிலம் ஒதுக்க ஆவணம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இம்மனுவை பெற்றுக்கொண்ட ரயில்வே அதிகாரி, கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ