உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

வில்லிவாக்கம், வில்லிவாக்கம், பாரதி நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் வில்சன், 45; தனியார் கெமிக்கல் நிறுவன ஊழியர்.மனைவி மற்றும் நான்கு மகள்களுடன் வசிக்கும் வில்சன், நேற்று முன்தினம் இரவு, புத்தாண்டை முன்னிட்டு, அதே பகுதியில் உள்ள சர்ச்சுக்கு குடும்பத்துடன் சென்றார்.பின், நள்ளிரவு 2:00 மணிக்கு வீடு திரும்பிய வில்சன் குடும்பத்தினர், கதவை பூட்டி படுத்திருந்தனர். 2:40 மணிக்கு திடீரென பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது.வெளியில் வந்து பார்த்தபோது, வீட்டு நுழைவாயிலின் இரும்பு கதவின் அருகில் சிறிய அளவில் நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்தோர் தீயை அணைத்தனர். பிளாஸ்டிக் ஜூஸ் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, தீ வைத்து அடித்துள்ளனர். 'சிசிடிவி'யில் பதிவான இக்காட்சியை வைத்து, மர்ம நபர்களை குறித்து வில்லிவாக்கம் போலீசார் தேடுகின்றனர்.நேற்று முன்தினம், அம்பத்துாரில் ரவுடி லொட்ட நவீன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். நவீன் எதிரியின் கூட்டாளி ஒருவர், வில்சன் வசிக்கும் தெருவில் முன்னதாக குடியிருந்தாகவும், அவரை மிரட்டுவதற்காக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி