உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உடற்கல்வியியல் கால்பந்து தமிழக பல்கலை வெற்றி

உடற்கல்வியியல் கால்பந்து தமிழக பல்கலை வெற்றி

சென்னை, ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரியின் உடற்கல்வியியல் துறை சார்பில், உடற்கல்வியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில், நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. இன்று மாலை வரை நடக்கின்றன.இருபாலருக்கான கால்பந்து, குத்துச்சண்டை, வில்வித்தை, நீச்சல், கூடைப்பந்து மற்றும் 'கார்ப் பால்' ஆகிய விளையாட்டுகள் நடக்கின்றன. போட்டியில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கு உட்பட நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., - கோவை மாருதி உட்பட 19 கல்லுாரிகள் பங்கேற்றுள்ளன.நேற்று காலை நடந்த கால்பந்து போட்டியில், சிவந்தி ஆதித்தனார் கல்லுாரி மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலை அணிகள் மோதின. அதில், 5 - 0 என்ற கணக்கில் தமிழ்நாடு உடற்கல்வியியல் அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், சேலம் ஸ்ரீ சாரதா கல்லுாரி மற்றும் விழுப்புரம் எம்.ஏ.எஸ்.எஸ்., கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன. அதில், 5 - 0 என்ற கணக்கில் சாரதா கல்லுாரி அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை