மேலும் செய்திகள்
வீடு புகுந்து போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி
05-Apr-2025
கொளத்துார், கொளத்துார், வரலட்சுமி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 59; கொத்தனார். நேற்று காலை 8:00 மணியளவில், ரெட்டேரி சந்திப்பில், தடம் எண் '121 ஜி' பஸ்சில் ஏறும்போது, வாலிபர் ஒருவர் கோவிந்தராஜின் பாக்கெட்டில் இருந்து, 25,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை பிக்பாக்கெட் அடித்து சென்றார்.இதை பார்த்த, லட்சுமிபுரத்தை சேர்ந்த முகமது, 35 என்பவர், பிக்பாக்கெட் ஆசாமியை கையும் களவுமாக பிடித்தார். பொதுமக்கள் உதவியுடன் ராஜமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.விசாரணையில், பிடிபட்டவர் ஆந்திராவை சேர்ந்த ராமுடு, 19 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
05-Apr-2025