உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனி சர்வீஸ் சாலையில் குழாய் மாற்றி அமைப்பு

வடபழனி சர்வீஸ் சாலையில் குழாய் மாற்றி அமைப்பு

வடபழனி:வடபழனி மேம்பாலத்தை ஒட்டி, 100 அடி சாலை உள்ளது. இதன் கீழ், புழலில் இருந்து குடிநீர் எடுத்து வர குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.அதேபோல், கீழ்ப்பாக்கத்தில் இருந்து கே.கே., நகருக்கு குடிநீர் எடுத்துச் செல்ல, பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயும் செல்கிறது.வடபழனி மேம்பால பணிகளின்போது, பழைய குழாய்கள் மாற்றி அமைக்கப்படவில்லை.இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கசிந்தது. இதையடுத்து குடிநீர் வாரியம், வடபழனி தனியார் மருத்துவமனை அருகே வால்வு அமைத்து, கசிவை சரிசெய்தது.தவிர, 300 மீட்டர் துாரத்திற்கு குழாயை மாற்றி அமைக்கும் பணியில், தற்போது ஈடுபட்டு வருகிறது.இதனால், வடபழனியில் இருந்து அரும்பாக்கம் நோக்கி செல்லும் வடபழனி சர்வீஸ் சாலை, குண்டும் குழியுமாக மாறி உள்ளது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி