64,755 மரக்கன்று 7 மாதத்தில் நடவு
சென்னை, நவ. 10-சென்னை மாநகராட்சி பகுதிகளில், சாலையோரங்களில் உள்ள மரங்கள், மழை காலங்களில் வேரோடு சாய்ந்து விடுகின்றன. ஒவ்வொரு பருவமழை காலத்திலும், 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விடுகின்றன. இதனால், பசுமை பரப்பளவு குறைவதை தடுக்க, திறந்தவெளி இடங்கள், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன.அதன்படி, வடசென்னையில், 16,678; மத்திய சென்னையில், 19,746; தென் சென்னையில், 28,331 என, 64,755 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இதற்காக, தோட்டக்கலை மற்றும் வனத்துறையிடம் இருந்து, சென்னை நிலபரப்புக்கு ஏற்ற மரக்கன்றுகள் பெறப்படுகின்றன.பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, பசுமை பரப்பை அதிகரிக்கும் பணி நடந்து வருவதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.