மேலும் செய்திகள்
பிறந்து 45 நாள் குழந்தை கண்ணகி நகரில் கடத்தல்
15-Nov-2024
திருநங்கை தர்ணா விருதையில் பரபரப்பு
28-Oct-2024
கண்ணகிநகர்:பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், நீலாங்கரை பகுதியில், 100க்கும் மேற்பட்ட திருநங்கையர் உள்ளனர். இவர்களில் பலர், உயர் படிப்பு, நல்ல வேலை என, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.சில திருநங்கையர் பாலியல் தொழில், திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக, போலீசில் புகார் சென்றுள்ளது. தன்னார்வ அமைப்புகளிடமும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, காவல் துறை களமிறங்கியது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று, கண்ணகி நகரில் நடந்தது. இதில், காவல் உயர் அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டனர்.போலீசார், திருநங்கைகளிடம் பேசியதாவது:கல்வி, வேலைவாய்ப்பு, குடியிருப்பு என, வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை, அந்தந்த துறை வாயிலாக செய்து தர தயாராக உள்ளோம். ஒவ்வொரு துறையிலும், பல்வேறு திட்டங்கள் உள்ளன. திருநங்கையர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறான பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து புகார் வராத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு போலீசார் பேசினர்.
15-Nov-2024
28-Oct-2024