மேலும் செய்திகள்
விழுப்புரம் நபர் கொலை வடமாநில வாலிபர் கைது
27-Oct-2025
ராஜமங்கலம்: வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றுபவர் நாகராஜன், 48. இவர், செந்தில் நகர் சந்திப்பில், நேற்று முன்தினம் பணியில் இருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த, 'மஹேந்திரா எக்ஸ்.யூ.வி., 500' காரின் பக்கவாட்டில் தொங்கியபடி, 10க்கும் மேற்பட்டோர் அபாயகரமாக சென்றனர். காரை பின் தொடர்ந்து, சிலர் பைக்கிலும் ஆபத்தாக சென்று கொண்டிருந்தனர். இதை கண்ட எஸ்.எஸ்.ஐ., நாகராஜன் மற்றும் போக்குவரத்து போலீசார், காரை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, காரில் இருந்தவர்கள், போக்குவரத்து போலீசாரை ஆபாசமாக திட்டிவிட்டு தப்பினர். காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்தவர்களை, போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து, வில்லிவாக்கம் போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., நாகராஜன், ராஜமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, கொடுங்கையூரைச் சேர்ந்த தனுஷ்குமார், 20, என, தெரிந்தது. தனுஷ்குமார் மீது, கொடுங்கையூர், புழல், மாதவரம் மற்றும் கோயம்பேடு காவல் நிலையங்களில், பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. இந்நிலையில், ராஜமங்கலம் போலீசார், தனுஷ்குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தனுஷ்குமாரிடம், அவரது கூட்டாளிகள் எட்டு பேரின் இருப்பிடம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27-Oct-2025