உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளம்பெண் மரணத்தில் மர்மம் கணவரிடம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மரணத்தில் மர்மம் கணவரிடம் போலீஸ் விசாரணை

திருவொற்றியூர், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், அவரது கணவரிடம் விசாரிக்கின்றனர். திருவொற்றியூர், காலடிப்பே ட்டை, மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கோபால், 30; இவர் மீது, திருவொற்றியூர், சாத்தாங்காடு காவல் நிலையங்களில், குற்ற வழக்குகள் உள்ளன. இவரது மனைவி ஜோதிகா, 25. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, பதற்றத்துடன் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்த கோபால், தன் மனைவி வீட்டில் மயங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் சென்று பார்க்கும்போது, ஜோதிகா உயிரிழந்து கிடந்துள்ளார். உடலை பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கோபாலுக்கு மதுப்பழக்கம் இருப்பதால், கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான், ஜோதிகா மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதற்கிடையில், 'ஜோதிகாவின் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பால் தான், மரணம் ஏற்பட்டுள்ளது' என, பிரேத பரிசோதனை முதற்கட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில், கோபாலிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !