உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனை கடித்த நாய் போலீசில் புகார்

சிறுவனை கடித்த நாய் போலீசில் புகார்

சென்னை, திருவல்லிக்கேணி, நடுக்குப்பம், எட்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜாரமன், 35. அவரது 10 வயது மகன், கடந்த 30ம் தேதி, வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றான். அப்போது ராஜாராமனின் பக்கத்து வீட்டில் விஜயசாந்தி என்பவர் வளர்த்து வந்த நாய், சிறுவனின் தொடையில் கடித்தது. காயமடைந்த சிறுவனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய நிலையில், நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிறுவனின் பெற்றோர், மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை