உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை, ஆவடி, தாம்பரத்தில் ஓராண்டில் உயிரிழப்புகள் குறைவு; அரசுக்கு அறிக்கை அனுப்பிய போலீசார்

சென்னை, ஆவடி, தாம்பரத்தில் ஓராண்டில் உயிரிழப்புகள் குறைவு; அரசுக்கு அறிக்கை அனுப்பிய போலீசார்

சென்னை: சென்னை, ஆவடி, தாம்பரம் என, மூன்று கமிஷனர் அலுவலக எல்லைகளிலும், ஓராண்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், 9 முதல் 23 சதவீதம் வரை குறைந்துள்ளதாக, போக்குவரத்து போலீசார் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். சென்னை, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின்கீழ் செயல்படும் போக்குவரத்து போலீசார், சாலை விபத்துகளை குறைக்கவும், சாலைகளை மேம்படுத்துவதோடு, முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விதிமீறல் வானங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில், மூன்று கமிஷனர் அலுவலக எல்லைகளிலும், 2024 செப்டம்பரில் இருந்து, இந்தாண்டு செப்டம்பர் வரை, ஓராண்டில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தி உள்ளனர். அதுபற்றி, அரசுக்கு அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். அதில், சென்னை மாநகர போலீஸ் எல்லையில் நடந்த சாலை விபத்துகளில், 9 சதவீத உயிரிழப்புகள் குறைந்துள்ளன. ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லையில், 33 சதவீதமும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லையில், 23 சதவீத உயிரிழப்புகளும் குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மின்வாரியத்தால் சாலைகள் பழுதடைந்து இருக்கும் தகவல்களையும், அறிக்கையில், படங்களுடன் சுட்டிக்காட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை