உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீஸ் எஸ்.ஐ., பணி இலவச பயிற்சி வகுப்பு

போலீஸ் எஸ்.ஐ., பணி இலவச பயிற்சி வகுப்பு

சென்னை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால், 1,299 போலீஸ் எஸ்.ஐ., பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடத்திற்கான தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாளான 5ம் தேதி, காலை 10:30 மணிக்கு துவங்க உள்ளது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் மற்றும் மாநில முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.வகுப்பில் சேர விரும்புவோர், உரிய விண்ணப்பங்களுடன், கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ, decgc.gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை