அண்ணா நகர் டவர் பூங்காவில் ஏறி போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
அண்ணா நகர்:அண்ணா நகர் டவர் பூங்காவில் நேற்று மாலை போலீஸ் சீருடையுடன் ஏறிய நபர், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரிடம் கீழே இறங்கி வருமாறு தெரிவித்தனர். அவர் மறுத்தார்.இதையடுத்து, அண்ணா நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயணைப்பு வாகனம் மூலம் பின் வழியாக ராட்சத ஏணி மூலம் சென்று, அந்த நபரை லாவகமாக மீட்டனர்.பின், கீழே அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆவடி சிறப்பு காவல் படை போலீஸ்காரர் பரீக் பாட்ஷா, 25, என தெரிய வந்தது.மேலும், அண்ணா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததும், பணி முடிந்து பூங்காவில் உள்ள டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.