போலீசார் உயிருக்கு உத்தரவாதம் இல்லை; பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி
பொள்ளாச்சி: 'தமிழகத்தில் போலீசார் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் ரோந்து செல்கின்றனர்,' என, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sb161tdh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொள்ளாச்சி அருகே, கிணத்துக்கடவு சிங்கராம்பாளையம் ஆதரவற்றோருக்கான 'சரணாலயம்' காப்பகத்தில் புதிய கட்டட திறப்பு விழாவில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.தொடர்ந்து, ஆச்சிப்பட்டி அருகே சரணாலயம் பிரித்தம் முதியோர் காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உடுமலை அருகே சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல், கொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் போலீஸ் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. போலீசார் உயிர் உத்தரவாதம் இல்லை என்ற அளவில் ரோந்து செல்கின்றனர். கஞ்சா, குடிபோதையில் வருவோர் என்ன செய் கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில், மூன்றாண்டுகளில், போலீஸ், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி., என அனைத்து பணியிடங்களையும் நிரப்பி, 'ஜீரோ வேக்கன்சி' என்ற நிலை ஏற்படுத்த வேண்டும். இரவு ரோந்து போலீசார் தனியாக செல்லாமல், இரண்டு பேருடன் செல்ல வேண்டும். நவீன உபகரணங்கள், நல்ல நிலையில் வேகமாக செல்லக்கூடிய ரோந்து வாகனங்கள், உடையில் கேமரா உள்ளிட்ட நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும். புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கி போலீசாரின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக்கூறி கடந்து செல்லாமல், போலீசாருக்கு தேவையான வசதிகளை செய்து தர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுபோன்று இனி ஒரு உயிர் போக கூடாது; நமக்காக பாதுகாப்பில் ஈடுபடுவோரின் பாதுகாப்பினை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு, சாராயமும், போதை பழக்கங்களும் காரணமாகும். இவற்றை இரும்பு கரங்களை கொண்டு தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.