| ADDED : நவ 16, 2025 02:46 AM
சென்னை: சூளை, அங்காளம்மன் கோவிலில் நிலவும் அரசியல் பிரச்னையால், புது அதிகாரி பதவியேற்க தயக்கம் காட்டி வருவது கண்டனத்திற்குரியது என, பாரத் ஹிந்து முன்னணி மாநில தலைவர் ஆர்.டி.பிரபு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சூளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாதர் கோவிலில், மூன்று ஆண்டாக நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சண்முகம், சவுகார்பேட்டை, பைராகி மடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஹிந்து சமய அறநிலை யத் துறை சார்பில், சவுந்தரபாண்டியன் என்பவர், சூளை அங்காளம்மன் கோவிலுக்கு, நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஒரு மாதத்திற்கு மேலாகியும், பணி ஏற் காமல் உள்ளார். விசாரித்ததில், அரசியல் தலையீடு, முன்னாள் அதிகாரி முறையாக கோவில் கணக்குகளை முடிக்காதது என, பல்வேறு பிரச்னைகள் இருப் பது தெரிய வந்தது. இப்பிரச்னையில், அறநிலை யத்துறை விசாரணை மேற்கொண்டு, உண்மையை கண்டறிய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.